மாநில செய்திகள்

பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது- எடப்பாடி பழனிசாமி + "||" + AIADMK cannot be paralyzed by making false allegations - Edappadi Palanisamy

பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது- எடப்பாடி பழனிசாமி

பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது- எடப்பாடி பழனிசாமி
வழக்குகளை கண்டு அஞ்சக்கூடிய கட்சி அதிமுக அல்ல என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற  எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமி,  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் பேசியதாவது: 

”அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசால் பொய் வழக்கு போடப்படுகிறது. வழக்குகளை கண்டு அஞ்சக்கூடிய கட்சி அதிமுக அல்ல. பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது. எம்ஜிஆர் இருக்கின்ற போது பல்வேறு சோதனைகளுக்கு உள்ளானார்கள். அதையெல்லாம் உடைத்தெறிந்து சாதனை படைத்த தலைவர் உருவாக்கிய கட்சி அதிமுக” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியை கைவிடவேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியை கைவிடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
2. வேதா இல்லத்தை மீட்க மேல்முறையீடு எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை மீட்கும் வகையில், கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. தி.மு.க.வில் சேரச்சொல்லி அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டுகின்றனர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வில் சேரச்சொல்லி அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டுகின்றனர் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
4. நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
5. வரும் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையில் வரும்24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.