மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + TN corona cases today

தமிழகத்தில் இன்று 1,009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று 1,009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் தற்போது 11,492 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை,

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 27,02,623 ஆக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,097 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,183 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,55,015 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 11,492 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு கொரோனா தொற்று
கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. 53 பேர் உயிரிழப்பு; தமிழகத்தில் 28 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 28 ஆயிரத்து 515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஜெர்மனியில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா
ஜெர்மனியில் ஒரே நாளில் 2,03,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.