மாநில செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் + "||" + O. Panneerselvam appeals to MK Stalin for a pay rise for transport workers

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்.
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி போக்குவரத்து தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.


அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க. அதை நிறைவேற்றாதது மனவருத்தத்தை அளிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறிவிட்டு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி வழங்கவேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பணியில் இருக்கும்போது உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி வழங்கவேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
2. சிறுவர்களின் குற்றச்செயல் அதிர்ச்சியளிக்கிறது: மாணவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனை சரத்குமார் வேண்டுகோள்
சிறுவர்களின் குற்றச்செயல் அதிர்ச்சியளிக்கிறது: மாணவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனை சரத்குமார் வேண்டுகோள்.
3. தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
மத்திய அரசு வரியை குறைத்த பிறகும் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏன்? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
4. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு, மறுவாழ்வுக்கான உதவிகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
5. அரசின் நிதிநிலையை சீராக்க தேவையான பரிந்துரையை ஆடிட்டர்கள் வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழக அரசின் நிதி நிலையை சீராக்குவதற்கு தேவையான பரிந்துரையை ஆடிட்டர்கள் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.