மலைக்கோவில்களுக்கு ரோப் கார்; சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்


மலைக்கோவில்களுக்கு ரோப் கார்; சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2021 7:37 AM GMT (Updated: 25 Nov 2021 7:37 AM GMT)

மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை மற்றும் திருக்கழுங்குன்றம் மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதையடுத்து மற்ற கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ள நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story