மாநில செய்திகள்

மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் + "||" + Compensation of Rs. 30,000 per acre should be provided for rain-damaged paddy

மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல என்று விவசாயிகள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் கூடுதல் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே, கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிய விவசாயிகளுக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.


எனவே, காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு மீண்டும் ஆய்வும், கணக்கெடுப்பும் மேற்கொள்ள வேண்டும். அதன்படி எவ்வளவு ஏக்கரில் நெற்பயிர்களும், பிற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைத் தீர்மானித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதேபோல், சேதமடைந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்தால், அவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் இழப்பீடும், சம்பா பயிர்களை மறுநடவு செய்வதற்காக ரூ.2,415 மதிப்புள்ள விதை மற்றும் உரங்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது போதுமானதல்ல. நெல் சாகுபடிக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கேற்ற அளவில் இழப்பீடு உயர்த்தி வழங்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும். எனவே, மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்; ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்
பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
2. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு: கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு: கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை.
3. இலங்கையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை
இலங்கையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
4. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தினார்.
5. சிப்காட் தொழிற்பேட்டைக்காக விளைநிலத்ைத கையகப்படுத்தக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சிப்காட் தொழிற்பேட்டைக்காக விளைநிலத்ைத கையகப்படுத்தக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.