தமிழகத்தில் கொரோனா ஆய்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழகத்தில் கொரோனா ஆய்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jan 2022 7:01 PM GMT (Updated: 11 Jan 2022 7:01 PM GMT)

தமிழகத்தில் கொரோனா ஆய்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா சோதனை கட்டணம் மிக அதிகமாக உள்ளது. டெல்லி, ராஜஸ்தான், மராட்டியம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகக்குறைவாக ஆந்திராவில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் ரூ.475 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு முகாம்கள் மூலம் கொரோனா சோதனை இலவசமாக செய்யப்படுகிறது. அரசு ஆய்வகங்களில் தனிப்பட்ட முறையில் சோதனை செய்து கொள்பவர்களுக்கு ரூ.550 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் ஆய்வகங்களில் இது ரூ.900 ஆக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் கொரோனா சோதனை கட்டணம் ரூ.600 ஆக உள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன், தனியார் ஆய்வகங்களின் கொரோனா ஆய்வுக் கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.500 ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story