தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2022 9:07 AM GMT (Updated: 20 Jan 2022 9:07 AM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 24ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், “இன்று (20.01.2022) முதல் 24.01.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இன்று (20.01.2022) மற்றும் நாளை (21.01.2022) நீலகிரி, கோவை, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story