ஈரோடு: மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை தாக்கிய யானை....!
ஈரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை யானை தாக்கி உள்ளது.
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே கோம்பை தொட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 27). இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் கடம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது புதருக்குள் மறைந்திருந்த ஒற்றை யானை சுரேசை தாக்கிய உள்ளது. இதில் சுரேசின் கையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.
பின்னர், சாலையில் காயம் அடைந்த நிலையில் கிடந்த சுரேசை மீட்டு அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உள்ள சுரேசுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை யானை தாக்கிய சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காயம் அடைந்த வாலிபர் சுரேஷ் மருத்துவமனையில் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
Related Tags :
Next Story