சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்
சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மீது 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் ஏற்கனவே 7 வழக்குகளில் செங்கல்பட்டு கோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் சிவசங்கர் பாபா ஜாமீன் பெற்றுள்ளார்.
மீதமுள்ள ஒரு வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகளுடன் பாஸ்போர்ட்டை தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story