திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்..!


திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்..!
x
தினத்தந்தி 10 May 2022 9:13 AM GMT (Updated: 2022-05-10T14:43:58+05:30)

மீச்சூர் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் போலிசார் 5 பேரை கைது செய்த சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே திருவெள்ளவாயல் அனுமதி இல்லாத  டாஸ்மாக் பாரில் ரவுடி மூர்த்தி கொலை செய்யப்பட்ட வழக்கில்  தனிப்படை அமைத்து போலீஸ் தேடி வந்தனர்.

இந்த நிலையில்  அத்திப்பட்டு புதுநகர் சேர்ந்த மோகன்ராஜ், மணிகண்டன், என்னுரை சேர்ந்த  கிஷோர், அருண்குமார்,  சுந்தர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து விசாரித்த போது  கொலை செய்யப்பட்ட மூர்த்தி கடந்த 2020-ம் ஆண்டு சிலம்பரசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது சிறையிலிருந்த அத்திப்பட்டு புதுநகர் சேர்ந்த மணிகண்டனை அடிக்கடி வேலை வாங்கி அடிமை போல் வைத்திருந்ததால் சிறையில் இவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் நிலவியுள்ளது.

பின்னர் மூர்த்தி வெளியே வந்தபின் மணிகண்டனை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.  இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மணிகண்டன் சக கூட்டாளிகளுடன் சேர்ந்து மூர்த்தியை கொலை செய்துவிட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.  பின்னர் 5 பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story