வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் முன்னோற்றுதலின் பொழுது இரு பிரிவினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. சித்ரா பவுர்ணமியையொட்டி 2 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இந்த பாலாற்றில் வரதராஜப்பெருமாள் இறங்கும் வைபவத்தில் நடைபெற்ற இரு பிரிவினருக்கிடையேயான மோதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து வரதராஜபெருமாள் கோவில் பிரமோற்சவத்தில் வடகலை பிரிவில் வேதபாராயணம் செய்ய அறநிலையத்துறை அனுமதி மறுத்தது. தொடர்ந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த சூழலில் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வேதபாராயணம் பாடுவதில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. மேலும் வடகலை, தென்கலை பிரச்சனையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தென்கலை பிரிவினரை மட்டும் வேதபாராயணம் பாட அனுமதித்தது பாரபட்சமானது என்றும் ஐகோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. மேலும் வடகலை, தென்கலை பிரச்னையை ஒழுங்குபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் முதல் மூன்று வரிசையில் தென்கலை பிரிவினரும், பின்னர் வடகலை பிரிவினரும், அடுத்து சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் என்றும் வீடியோ பதிவுடன் மே 25ஆம் தேதி அறநிலையத்துறை அதிகாரி அறிக்கை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்களும் பாடுகிறார்கள் என்றும், நாலாயிர திவ்ய பிரபந்தம், திராவிட பிரபந்தம், திராவிட வேதம் என நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story