குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 28 ரவுடிகள் கைது


குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 28 ரவுடிகள் கைது
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 28 ரவுடிகளை கைது செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

புதுக்கோட்டை

தனிப்படை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, குட்கா, ஆன்லைன் லாட்டரி விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது 3.0 ஆபரேஷன் மூலம் கஞ்சா வேட்டை நடைபெற்று வருகிறது.

இதேபோல் குற்றச்சம்பவங்களை தடுக்க பட்டியலிடப்பட்ட ரவுடிகள் மற்றும் பழைய குற்றச்சம்பவங்களில் தொடர்பு இருந்து தேடப்படும் நபர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடியிசம் செய்யும் நபர்களை கைது செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

28 ரவுடிகள் கைது

இந்த தனிப்படையினர் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களில் போலீசாரின் அதிரடியில் இதுவரை 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story