சகோதரர்கள் 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை
சகோதரர்கள் 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.
கரூர்
குளித்தலை அருகே உள்ள வேளாங்காட்டுபட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 61). நிலம் விற்றது தொடர்பாக இவருக்கும், இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சுந்தர்ராஜனை அவரது தம்பியின் மகன்களான மலையாளன் (42), தங்கராஜ் (40), ராஜமாணிக்கம் (38) ஆகிய 3 பேரும் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை குளித்தலை குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் நடந்து வந்தது. இதையடுத்து நேற்று இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி பிரகதீஸ்வரன் சுந்தர்ராஜை தாக்கிய மலையாளன், தங்கராஜ், ராஜமாணிக்கம் ஆகிய 3 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஒரு வார சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story