கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3½ கோடியில் நலத்திட்ட உதவிகள்
கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3½ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கரூர்
கடந்த மே மாதம் 7-ந் தேதி முதல் தற்போது வரை பதிவு பெற்ற அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம் மற்றும் புதிய ஓய்வூதியம் போன்ற பல்வேறு திட்டங்களில் 16,436 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் கட்டிடம் மற்றும் இதர கட்டுமானங்களில் பணிபுரியும் 2,290 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.48 லட்சத்து 77 ஆயிரத்து 828 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story