தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பேர் படுகாயம்


தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பேர் படுகாயம்
x

நாகர்கோவிலில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பேர் காயம் அடைந்தனர். 2 வாகனங்கள் சேதமடைந்தன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பேர் காயம் அடைந்தனர். 2 வாகனங்கள் சேதமடைந்தன.

தாறுமாறாக ஓடிய கார்

தக்கலை அருகே உள்ள முளகுமூட்டை சேர்ந்தவர் வினோ ரெஞ்சின் (வயது 39). இவர் நேற்று முன்தினம் மதியம் தன் நண்பர்களுடன் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டியுள்ளார். நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தை கடந்து வெட்டூர்ணிமடம் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் எதிர்பாராத விதமாக சாலை ஓரம் நின்று பேசிக்கொண்டிருந்த 3 பேர் மீது மோதியது.

அதோடு நிற்காத கார் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மற்றும் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 கார்கள் மற்றும் ஸ்கூட்டர் பலத்த சேதம் அடைந்தன.

3 பேர் படுகாயம்

மேலும் இனையம்புத்தன் துறையை சேர்ந்த ஜினோ சச்சின் (23), டொனலின் (26) மற்றும் பள்ளிவிளையை சேர்ந்த ராஜன் (69) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து காயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கோட்டார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வினோ ரெஞ்சின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story