அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

வச்சக்காரப்பட்டி,

விருதுநகர் அருகே உள்ள கன்னிசேரி- நாரணாபுரம் ரோட்டில் வச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ரூ.75,850 மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாடியூரை சேர்ந்த கருப்பசாமி (வயது 36), கீழ திருத்தங்கல்லை சேர்ந்த எம்.கருப்பசாமி (48), ஓ.கோவில்பட்டியை சேர்ந்த தர்மர் (33) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Related Tags :
Next Story