புகையிலை பொருட்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்: டிரைவர் உள்பட 3 பேர் கைது
புகையிலை பொருட்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தவிட்டுப்பாளையத்தில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தக்காளி லோடுகளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் கோட்டை அண்ணாநகர் வடக்கு தெருவை சேர்ந்த குமார் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் புகளூர் 4-ரோடு அருகே உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக அதன் உரிமையாளர் இளங்கோவன் (67) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வேலாயுதம்பாளையம் மாலை வீதி ரவுண்டானா அரகே ஒரு டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக அதன் உரிமையாளர் சக்தி (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன: