3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஆந்திராவுக்கு கடந்த முயன்ற 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காட்பாடி டெல் குடியிருப்பு அருகே நடந்த வாகன சோதனையில் ஆந்திரா நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கடத்தி வந்த சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விநாயகம் (வயது 36), திருவள்ளூர் மாவட்டம் நெற்குணத்தை சேர்ந்த விஜய் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story