நன்னடத்தை விதியை மீறிய 3 வாலிபர்கள் சிறையில் அடைப்பு


நன்னடத்தை விதியை மீறிய 3 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
x

மாத்தூரில் நன்னடத்தை விதியை மீறிய 3 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை

விராலிமலை ஒன்றியம், மாத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் விக்னேஷ் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சதீஷ் (32). மாத்தூர் நாஞ்சிலார் நகரை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜெயபிரகாஷ் (35). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் அவ்வப்போது சிறு சிறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அவர்கள் 3 பேரையும் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் கைது செய்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி நன்னடத்தை விதியின் கீழ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் விக்னேஷ், சதீஷ், ஜெயபிரகாஷ் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாத்தூர் ரவுண்டானா அருகே தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் மீது நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் 3 வாலிபர்களும் நன்னடத்தை விதியின்கீழ் ஜாமீனில் இருப்பது தெரியவந்த நவல்பட்டு போலீசார் இதுகுறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் 3 பேர் மீது நன்னடத்தை விதியின் கீழ் இருந்த ஜாமீனை ரத்து செய்துவிட்டு அவர்களை கைது செய்தார். பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.


Next Story