3-வது நாளாக காங்கிரசார் பாதயாத்திரை;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கிள்ளியூர் தொகுதியில் 3-வது நாளாக காங்கிரசார் பாதயாத்திரையாக சென்றனர். இந்த பாதயாத்திரையை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கருங்கல்,
குமரியில் 3-வது நாளாக நடந்த காங்கிரஸ் கட்சியினரின் பாதயாத்திரையை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
காங்கிரஸ் பாதயாத்திரை
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குமரியில் 3-வது நாளாக காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை நடந்தது. கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தொலையாவட்டம் பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் பாதயாத்திரை நிகழ்ச்சியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல் நாள் பாதயாத்திரை கொல்லங்கோடு கண்ணநாகம் பகுதியில் தொடங்கி புதுக்கரையில் நிறைவடைந்தது. 2-ம் நாள் புதுக்கடை பஸ்நிலையத்தில் தொடங்கி தொலையாவட்டத்தில் நிறைவடைந்தது. 3-ம் நாள் பாதயாத்திரை தொலையாவட்டத்தில் இருந்து தொடங்கி முள்ளங்கினாவிளை, நட்டாலம் வழியாக சென்று விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குள் பாதயாத்திரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரைக்கு பொதுமக்கள் ஆக்கவும் ஊக்கமும் அளித்து வருவதில் பெருமை கொள்கிறோம் என்றார்.
இந்த பாத யாத்திரைக்கு வட்டார தலைவர்கள் கிறிஸ்டோபர், பால்ராஜ், டென்னிஸ், கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் கிளைமெண்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பாதயாத்திரையில் மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், மாவட்ட நிர்வாகிகள் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் லெலின்குமார், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.