ஒரே நாளில் 4 கோவில்கள் குடமுழுக்கு


ஒரே நாளில் 4 கோவில்கள் குடமுழுக்கு
x

மதுக்கூர் அருகேஒரே நாளில் 4 கோவில்கள் குடமுழுக்கு நடந்தது.

தஞ்சாவூர்

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே கல்யாண ஓடை கிராமத்தில் உள்ள பிடாரியம்மன், இரட்டை விநாயகர், காமாட்சி அம்மன், ஆனந்த விநாயகர் உள்ளிட்ட 4 கோவில்களில் ஒரே நாளில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு யாகசாலைகள் பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் கல்யாணஓடை மற்றும் மதுக்கூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த 2000-க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கு மதுக்கூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story