தமிழ்நாட்டில் நடந்த லோக் அதாலத்தில் 4,800 வழக்குகள் முடிவுக்கு வந்தன - மாநில சட்டப்படி ஆணைக்குழு


தமிழ்நாட்டில் நடந்த லோக் அதாலத்தில் 4,800 வழக்குகள் முடிவுக்கு வந்தன - மாநில சட்டப்படி ஆணைக்குழு
x
தினத்தந்தி 12 Aug 2023 11:00 PM GMT (Updated: 12 Aug 2023 11:00 PM GMT)

தமிழ்நாட்டில் நடந்த லோக் அதாலத்தில் 4,800 வழக்குகள் முடிவுக்கு வந்தன - மாநில சட்டப்படி ஆணைக்குழு உறுப்பினர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. தமிழ்நாட்டில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா வழிகாட்டுதலின்பேரில், ஐகோர்ட்டு சட்டப்பணி ஆணைக்குழு நிர்வாகத்தலைவரும், மூத்த நீதிபதியுமான எஸ்.வைத்தியநாதன் மேற்பார்வையில் லோக் அதாலத் நடந்தது.

சென்னை ஐகோர்ட்டில், நீதிபதிகள் ஜே.சத்தியநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர், கே.குமரேஷ் பாபு, பி.பி.பாலாஜி, ஆர்.சக்திவேல், கே.ராஜசேகர் ஆகியோர் தலைமையில் 6 அமர்வுகளும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் கே.கே.ராமகிருஷ்ணன், சி.குமரப்பன், ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகளும், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் என்று மொத்தம் 165 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நீதிபதிகள், செக்மோசடி, விபத்து உள்ளிட்ட பல வகையான வழக்குளை விசாரணைக்கு எடுத்து, இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 ஆயிரத்து 881 வழக்குளை சமரசத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 117 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 738 ரூபாய் கிடைத்துள்ளது.

மேற்கண்ட தகவலை மாநில சட்டப்படி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஏ.நசீர்முகமது கூறியுள்ளார்.


Next Story