ஜல்லிக்கட்டில் 492 காளைகள் சீறிப்பாய்ந்தன


ஜல்லிக்கட்டில் 492 காளைகள் சீறிப்பாய்ந்தன
x

புள்ளம்பாடி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 492 காளைகள் சீறிப்பாய்ந்தன.

திருச்சி

கல்லக்குடி, மே.29-

புள்ளம்பாடி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 492 காளைகள் சீறிப்பாய்ந்தன.

ஜல்லிக்கட்டு

புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 492 காளைகள் கலந்து கொண்டன.

இதேபோல் 192 மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டை ஊராட்சி தலைவர் தனலட்சுமி ரவி முன்னிலையில் லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். காலை 8.10 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் வரை நடைபெற்றது.

8 பேர் காயம்

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் பிடிபடாமல் வீரர்களை மிரட்டியது. சில காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை முட்டி தள்ளியது.

இதில் காளைகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர். இதில் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த 2 பேர் லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசுகள்

இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின்உரிமையாளர்களுக்கும் சில்வர் அண்டாக்கள், கட்டில்கள், மிக்சி, குக்கர் ரூ.4 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த ஜல்லிக்கட்டு காளைக்கான பரிசை மதுரை மாவட்டம் அவனியாபுரம் கண்ணன் காளை தட்டி சென்றது. சிறந்த மாடுபிடி வீரராக லால்குடி நந்தா தேர்வு செய்யப்பட்டார். ஜல்லிக்கட்டையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

..


Next Story