கயத்தாறு அருகே இடிமின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி


கயத்தாறு அருகே இடிமின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி
x

கயத்தாறு அருகே இடிமின்னல் தாக்கி 5 ஆடுகள் பலியாகின.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் நேற்று மதியம் 1 மணி முதல் 2.30 மணி வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் போது ஊருக்கு மேற்கே பூல்பாண்டி என்பவரின் தோட்டத்தில், அதே ஊரைச் சேர்ந்த பேச்சுமுத்துதேவர் மகன் மாரிமுத்து (வயது 40) ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடிமின்னல் தாக்கியதில் 4 வெள்ளாடுகளும், அருகில் மேய்ந்து ெகாண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கோபால் நாயக்கரின் ஒரு செம்மறி ஆடும் பலியாகின. இதுகுறித்து தகவலறிந்த வடக்குஇலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் கணபதி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தாசில்தார் சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளர் நேசமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.


Next Story