டீ கடையில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயம்


டீ கடையில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயம்
x

ராணிப்பேட்டை அருகே டீ கடையில் சிலிண்டரில் இருந்து ஏற்பட்ட கியாஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே டீ கடையில் சிலிண்டரில் இருந்து ஏற்பட்ட கியாஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

தீ விபத்து

ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவர் ராணிப்பேட்டை - வாணாபாடி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே டீ கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல தனது டீ கடையில் கியாஸ் அடுப்பை பற்றவைத்துள்ளார்.

அப்போது ஏற்கனவே கியாஸ்கசிவு ஏற்பட்டிருந்ததால் அடுப்பை பற்றவைத்தபோது குபீரென தீ பிடித்தது. இதில் செல்வராஜ், வாணாபாடி ஊராட்சி மாணிக்கம் நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55), வேணு (45), வாணாபாடி பகுதியை சேர்ந்த சேட்டு (20), செட்டித்தாங்கல் பகுதியை சேர்ந்த சேகர் (60) ஆகிய 5 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

அவர்களில் செல்வராஜ் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ராதாகிருஷ்ணன் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், வேணு, சேட்டு, சேகர் ஆகிய 3 பேரும் வாலாஜா அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு செனஅறு பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story