குமரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா


குமரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா
x

குமரியில் மேலும் 5 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி மாவட்டம் முழுவதும் நேற்று 310 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அகஸ்தீஸ்வரம், நாகர்கோவில், மேல்புறம், ராஜாக்கமங்கலம், தோவாளை பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் வீதம் மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 பேர் பெண்கள் ஆவர். தொற்று பாதித்த அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story