ஆடு திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது


ஆடு திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
x

ஆடு திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி, கறம்பக்குடி, செம்பட்டி விடுதி பகுதிகளில் ஆடுகள் திருட்டு தினந் தோறும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆடுகளை பறிகொடுத்தவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையிலான தனிப்படை போலீசார் இச்சடி, முள்ளிக்காப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்ளிக்காபட்டி வழியாக வந்த 2 கார்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் உள்ளவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். மேலும் போலீசார் கிடுக்கி பிடி விசாரணையில் ஆடுகளை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள் கந்தர்வகோட்டையை சேர்ந்த அய்யப்பன் (வயது 38), கல்லாக்கோட்டை முருகேசன் (43), குமார் (35), ராமராசு (32), மாரிமுத்து மகன் ஜோதி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 46 ஆடுகள், 2 கார்களை பறிமுதல் செய்து செம்பட்டி விடுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story