விவசாயியை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை


விவசாயியை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை
x

விவசாயியை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது

திருநெல்வேலி

வள்ளியூர்:

கூடங்குளம் அருகே உள்ள ஊரல்வாய்மொழியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 63). விவசாயியான இவருக்கும் அவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த இசக்கியப்பன் (50) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 12.10.2014 அன்று விவசாய நிலத்தில் அருணாசலம் பொக்லைன் எந்திரம் மூலம் முட்செடிகளை அகற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கியப்பன், அருணாசலத்தை அவதூறாக பேசி கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து அருணாசலம் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று கோர்ட்டில் நடந்தது. இதை விசாரித்த நீதிபதி பர்சத் பேகம், இசக்கியப்பனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 2 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ராமநாராயணபெருமாள் ஆஜரானார்.


Next Story