சோளிங்கர் ெரயில் நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


சோளிங்கர் ெரயில் நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

சோளிங்கர் ெரயில் நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

பாணாவரம் பகுதியில் உள்ள சோளிங்கர் ெரயில் நிலைய நடைமேடை அருகே அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமாா் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நடைமேடை அருகே முட்புதரில் மூட்டைகள் இருந்ததை பார்த்தனர். அதை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து 22 மூட்டைகளில் இருந்த சுமாா் 500 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு உணவு பாதுகாப்பு பறக்கும்படை தாசில்தார் இளஞ்செழியனிடம் ஒப்படைத்தனர்.


Next Story