காளை விடும் விழாவில் சீறிப்பாய்ந்த மாடுகள் முட்டி 58 பேர் காயம்


காளை விடும் விழாவில் சீறிப்பாய்ந்த மாடுகள் முட்டி 58 பேர் காயம்
x

பென்னாத்தூரில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 58 பேர் காயம் அடைந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பிறகும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் விழா தொடர்ந்து நடந்ததை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருப்பத்தூர்

பென்னாத்தூரில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 58 பேர் காயம் அடைந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பிறகும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் விழா தொடர்ந்து நடந்ததை போலீசார் தடுத்து நிறுத்தினர்.பென்னாத்தூரில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 58 பேர் காயம் அடைந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பிறகும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் விழா தொடர்ந்து நடந்ததை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

காளைவிடும் விழா

அடுக்கம்பாறையை அடுத்த பென்னாத்தூரில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் மயான கொள்ளை விழாவையொட்டி நேற்று காளை விடும் விழா நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 400 காளைகள் பங்கேற்றன. விழா காலை 10 மணிக்கு தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அளவுக்கு அதிகமாக காளைகள் குவிந்ததால் விழாக்குழுவினர் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் காலை 7.30 மணிக்கே விழாவை தொடங்கி காளைகளை அவிழ்த்து விட்டனர்.

இந்த நிலையில் விழாவை கண்காணிக்க வேலூர் சப்-கலெக்டர் பூங்கொடி தலைமையில் தாசில்தார் செந்தில், மண்டல துணை தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் உலகநாதன், வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் அதிகாரிகள் வந்திருந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்து விழா ஏற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.அதன்பின்னர் சமரசத்துக்கு பிறகு, சப்- கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு, தொடர்ந்து எருது விடும் விழா நடைபெற்றது.

சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில், 58 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

காளைகள் முட்டியதில், 58 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

விழா 2 மணியுடன்முடிக்க நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் மேலும் காளைகள் அவிழ்த்து விடப்பட வேண்டியிருந்தது. தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒருகட்டத்தில் போலீசார் களத்தில் இறங்கி விழாவை தடுத்து நிறுத்தினர்.

வாக்குவாதம்

அப்போது காளை விடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட காளைகளின் உரிமையாளர்கள் நுழைவு கட்டண அட்டைக்காக வசூல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி தரக்கோரி விழாக்குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காளை உரிமையாளர்களின் ஆவேசத்தால், வாங்கிய கட்டணத்தை திருப்பி வழங்கப்பட்டது.

விழாவில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.55 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.45 ஆயிரம் என மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டது


Next Story