பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 6 பேர் காயம்


பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 6 பேர் காயம்
x

உளுந்தூர்பேட்டை அருகே பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 6 பேர் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டையில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் செல்லூர் கிராமம் வழியாக திருக்கோவிலூருக்கு புறப்பட்டது. நாயனூர் கிராமத்தை சேர்ந்த குரு(வயது 27) என்பவர் பஸ்சை ஓட்டினார். நெய்வனையில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம், பஸ் மீது மோதியது. உடனே டிரைவர், இடது பக்கமாக பஸ்சை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் குரு, கண்டக்டர் ரவி உள்பட 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story