கோஷ்டி மோதலில் 6 பேர் காயம்


கோஷ்டி மோதலில் 6 பேர் காயம்
x

முனைஞ்சிப்பட்டி அருகே கோஷ்டி மோதலில் 6 பேர் காயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி தாலுகா முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பதைக்கம் காலனியை சேர்ந்த 14, 15, 16 வயதுடைய 3 வாலிபர்கள் நேற்று முன்தினம் பார்ப்பரம்மாள்புரம் ஊர் வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். அதனை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கண்டித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த இருதரப்பினரும் கோஷ்டியாக திரண்டு மோதிக்கொண்டனர். இதில் பதைக்கம் காலனியை சேர்ந்த 3 வாலிபர்களுக்கு காயம் ஏற்பட்டது. மற்றொரு தரப்பில் பார்ப்பரம்மாள்புரத்தைச் சேர்ந்த சீமோன் ராயப்பன் (வயது 40), மரியஞானம் (34), ஜெபஸ் அமினதாஸ் (28) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் பார்ப்பரம்மாள்புரத்தைச் சேர்ந்த சீமோன் ராயப்பன், ஜஸ்டின் (35), ஞானராஜ் (35), சாக்ரடீஸ் (20), ராஜன் (50), ஜெபஸ்டின் (27), ராபின் (25) உள்பட 8 பேர் மீதும், பதைக்கம் காலனியை சேர்ந்த முனியசாமி (31), தங்கதுரை (29), இசக்கிமுத்து என்ற சூப்பர் (35) உள்பட 6 பேர் மீதும் என மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story