பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x

விராலிமலை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா லஞ்சமேடு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாமணி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லஞ்சமேடு பகுதியில் உள்ள தைல மரக்காட்டில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதை கண்டறிந்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட இடையபட்டியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 48), லஞ்சமேடு பகுதியை சேர்ந்த கணேசன் (48), ஆறுமுகம் (42), துரைராஜ் (30), அகரப்பட்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி (45), சரவணன் (40) ஆகிய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து சூதாடுவதற்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.4 ஆயிரத்து 690 பறிமுதல் செய்தனர்.


Next Story