75-வது சுதந்திர தின விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்


75-வது சுதந்திர தின விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
x

75-வது சுதந்திர தின விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

திருவாரூர்

மன்னார்குடி

பா.ஜ.க. இளைஞரணி சார்பில் 75-வது சுதந்திர தின விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மன்னார்குடி, வலங்கைமானில் நடந்தது.

மன்னார்குடி

பா.ஜ.க. இளைஞரணி சார்பில் மன்னார்குடியில் 75-வது சுதந்திர தின விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நகர இளைஞர் அணி தலைவர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட தலைவர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் அறிவுராம், இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் அய்யாகுட்டி, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வம், நகர தலைவர் ரகுராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் மன்னார்குடி தேரடியில் இருந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் மன்னார்குடியை அடுத்த சேரன்குளத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் பாஷ்யம் எனும் ஆர்யா நினைவு நூலகத்தில் உள்ள நினைவகத்தில் மாலை அணிவிக்கப்பட்டு நிறைவடைந்தது. முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் நிறைவுரையாற்றினாா்.

வலங்கைமான்

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவது குறித்து பா.ஜ.க.வினர் வலங்கைமானில் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை நடத்தினர். ஊர்வலத்திற்கு ஒன்றிய தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். ஊர்வலம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு வலங்கைமான் முக்கிய வீதிகள் வழியாக சென்று மகாமாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராமன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் தமிழ்வேந்தன், மாவட்ட வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story