தென்பால் பகுதியில் 86 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன


தென்பால் பகுதியில் 86 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
x

தென்பால் கடல் பகுதியில் 86 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தென்பால் கடல் பகுதியில் 86 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

கடல் ஆமைகள்

குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறு ஆமைகள் இடும் முட்டைகளை அழியாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் அவற்றை வனத்துறையினர் சேகரிப்பார்கள். பின்னர் ஆமை முட்டை பொரிப்பகத்தில் பாதுகாத்து முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியே வந்ததும் அதை கடலில் விடுவார்கள். வனத்துறையினரின் இந்த முயற்சியால் கடல் ஆமைகள் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேளிமலை வனச்சரகம் தென்பால் கடற்கரை பகுதியில் 86 பங்குனி ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வன அலுவலரும், வன உயிரினக் காப்பாளருமான இளையராஜா தலைமையில் கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மணிக்கட்டிப்பொட்டல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு கடல் ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர்.

தூய்மை பணி

இதைத் தொடர்ந்து வனக்கோட்டம் தயாரித்த கடல் ஆமைகள் மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளம் தொடர்பான குறும்புத்தகங்கள் மற்றும் குமரி வனக்கோட்டம் தயாரித்த வண்ணத்துப் பூச்சிகள் வழிகாட்டி கையேடுகள் வெளியிடப்பட்டன. அவற்றை வன அதிகாரி இளையராஜா மற்றும் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ஆகியோர் வெளியிட மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து கடல்ஆமை மணல் சிற்பம் திறக்கப்பட்டது. மேலும் கடல் ஆமை பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கடற்கரை தூய்மை செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.


Next Story