ராமநாதபுரத்தில் 9 வயது சிறுமி உலக சாதனை


ராமநாதபுரத்தில் 9 வயது சிறுமி உலக சாதனை
x

ராமநாதபுரத்தில் 9 வயது சிறுமி மரக்காலில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சிலம்பம் சுற்றி கலாம் உலக சாதனை படைத்தார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் செய்யது அம்மாள் சிபி.எஸ்.இ. பள்ளியில் ராமநாதபுரம் மாவட்ட சிலம்ப ஆசிரியர்கள் நலச்சங்கம் மற்றும் கலாம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 9 வயது சிறுமி கனிஷ்கா மரக்காலில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சிலம்பம் சுற்றி கலாம் உலக சாதனை படைத்தார்.

அதனைத்தொடர்ந்து மாணவியை நகரசபை துணைத்தலைவர் பிரவீன் தங்கம் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். மேலும் மாணவியின் சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேலுக்கு முக்கிய பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Next Story