கூடலூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நில பிரச்சினைக்கு தீர்வு காணாதது குறித்து பிரசார நடைபயணம்


கூடலூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நில பிரச்சினைக்கு தீர்வு காணாதது குறித்து பிரசார நடைபயணம்
x
நீலகிரி

கூடலூர்

கூடலூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாதது குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சார நடை பயணம் மேற்கொண்டனர்.

பிரசார நடை பயணம்

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் விவசாயிகளின் நிலப்பிரச்சினைக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் உள்ளது. இதனால் மக்களின் நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அடுத்த மாதம் 12- ம் தேதி கூடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இது முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்திற்கு முன்னோடியாக பிரச்சார நடை பயணம் கூடலூரில் நேற்று நடைபெற்றது. கூடலூர் காந்தி சிலை அருகில் தொடங்கி செம்பாலா, ஈட்டிமூலா, முதல் மைல், புரமண வயல், காளம்புழா வழியாக கூடலூர் புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. நிகழ்ச்சிக்கு செயலாளர் சி கே மணி தலைமை வகித்தார். அரவிந்தாட்சன் முன்னிலை வகித்தார்.தங்கராஜ், குஞ்சு முகமது, யோகண்ணன், ஏசி சாக்கோ, எம் ஆர் சுரேஷ், ஜோஸ் ஆகியோர் பேசினர். நடைப்பயணத்தில் ஏராளமான கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.

தீர்வு காணப்படவில்லை

இதுகுறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியதாவது:-

1969-ம் ஆண்டில் ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் நிலம்பூர் கோவிலகத்துக்கு சொந்தமான 98 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டன. ஜமீன் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி பட்டா வழங்கும் சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்பட்ட இந்த நிலங்களில் வசித்த விவசாயிகளுக்கு நில உரிமை வழங்கும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது. இந்த வகையில் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு அன்றைய முதல்வர் கருணாநிதியால் நில பட்டா வழங்கப்பட்டது.

1972ம் ஆண்டில் அன்றைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஏ கே கோபாலன் தலைமையில் நில வெளியேற்றத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அடுத்து ஜமீன் நிலங்களில் வசித்த மக்களை நிலவெளியேற்றம் செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. 1972ம் ஆண்டில்18 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்ட நிலையில் இதுவரை விவசாயிகளின் நிலங்களுக்கு எந்த விதமான தீர்வும் காணப்படவில்லை. இன்றைய விவசாயிகள் வன விலங்குகளின் பிரச்சனைகளால் அனுபவிக்கும் துயரங்களுக்கும் தீர்வு காணப்பட வில்லை. 50 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் தீர்வு காணப்படாத விவசாயிகளின் கைவச நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். கிராம பகுதியில் உள்ள தரமற்ற சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story