சாலையோரத்தில் சாய்ந்து நின்ற சரக்கு ஆட்டோ


சாலையோரத்தில் சாய்ந்து நின்ற சரக்கு ஆட்டோ
x

சாலையோரத்தில் சாய்ந்து நின்ற சரக்கு ஆட்டோ

திருவாரூர்

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே சரக்கு ஆட்டோ சாலையோரத்தில் சாய்ந்து நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

சரக்கு ஆட்டோ

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் பகுதியில் நேற்று காலை ஒரு சரக்கு ஆட்டோவில் பழங்கள் வைத்து கொண்டு தெரு தெருவாக விற்பனை செய்தபடி சென்றது. வடபாதிமங்கலம் அரசு பள்ளி அருகில் உள்ள சாலையில் சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவை ஓட்டிச்சென்ற பேராவூரணியை சேர்ந்த கனி (வயது60) என்பவர் ஆட்டோவிலேயே மயங்கிய நிலையில் சாய்ந்தார்.

சாலையோரத்தில் சாய்ந்து நின்றது

இதனால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையோரத்தில் சாய்ந்து நின்றது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஆட்டோவில் மயங்கிய நிலையில் இருந்த டிரைவரை மீட்டு உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

டிரைவர் உயிர் தப்பினார்

இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ மரத்தில் சாய்ந்து நின்றதால், அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். விபத்தின்போது சாலையோரத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் பள்ளி மாணவர்கள் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Related Tags :
Next Story