குப்பை சேகரிக்கும் வாகனத்தை ஓட்டிப்பார்த்த கலெக்டர்


குப்பை சேகரிக்கும் வாகனத்தை ஓட்டிப்பார்த்த கலெக்டர்
x

விரிஞ்சிபுரத்தில் குப்பை சேகரிக்கும் வாகனத்தை கலெக்டர் ஓட்டிப்பார்த்தார்.

வேலூர்

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இறைவன்காடு, சத்தியமங்கலம், குருவராஜபாளையம், அகரம், கங்கநல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதிதாக ரூ.24 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 10 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.

இதில் இறைவன்காடு, சத்தியமங்கலம் ஆகிய ஊராட்சிக்கு பயன்படுத்தப்பட உள்ள 4 வாகனங்கள் தொடக்க விழா விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, தாசில்தார் ரமேஷ், இளநிலை பொறியாளர் சிவக்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு வாகனங்களை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் வாகனங்களை அவர் ஓட்டிப்பார்த்து ஆய்வு செய்தார். ஏற்கனவே பயன்படுத்தி வந்த குப்பை சேகரிக்கும் வாகனங்களையும் அவர் ஆய்வு செய்தார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன், பணி மேற்பார்வையாளர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story