மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 23 Aug 2023 3:00 AM IST (Updated: 23 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.எம்.டி.சி. காலனி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முகமது ஆரிப் (வயது 23). இவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வந்தார். நேற்று இவர், திண்டுக்கல்-நத்தம் சாலையில் ரெட்டியபட்டி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது ஆரிப், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான முகமது ஆரிப்புக்கு திருமணமாகி நூரூல் சபியா (23) என்ற மனைவியும், 1½ மாத ஆண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கத்து.


Next Story