விஷம் குடிப்பதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய கல்லூரி மாணவி...!


விஷம் குடிப்பதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய கல்லூரி மாணவி...!
x
தினத்தந்தி 25 Nov 2022 6:06 PM GMT (Updated: 26 Nov 2022 10:29 AM GMT)

நாட்டறம்பள்ளி அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி விஷம்குடிப்பதை வீடியோவாக பதிவுசெய்து காதலனுக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி விஷம்குடிப்பதை வீடியோவாக பதிவுசெய்து காதலனுக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி தற்கொலை

நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் திருமால். இவரது மகள் சரண்யா (வயது 23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததை தாயார் கண்டித்ததால் கடந்த 11-ந் விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இநத ்நிலையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வீடியோ அனுப்பினார்

சரண்யா குளிர்பானத்தில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்து கொண்டு அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தனது காதலனுக்கு அனுப்பி உள்ளார். அதில் சாரி மாமா நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன் ென நினைக்கிறேன். நான் கண்டிப்பாக வரமாட்டேன், அவ்வளவுதான் போய் சேர்ந்துவிடுவேன். சந்தோஷமாக, நிம்மதியாக இரு, யாருக்கும் எந்த வித கஷ்டத்தையும் கொடுக்காதே.

நான் இருப்பது உனக்கு கஷ்டமாக இருக்குது. நான் கண்டிப்பாக எந்த கஷ்டத்தையும் உனக்கு தர மாட்டேன். என் அம்மாவை பார்த்துக்கோ. உன்னை எவ்வளவு லவ் பண்ணேன் என்பதை புரியாமல் இருக்கிறாய். உன்னால் தான் நான் சாகிறேன். என் அம்மாவை பார்த்துக்கோ. வேறு எதுவும் எனக்காக பண்ணாதே. லவ் யூ மாமா பாய் என பேசி உள்ளார்.

சரண்யாவின் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்் தேதி இருவரும் இணைந்து பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.


Next Story