விளையாட்டு வீராங்கனைகளுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் திட்டம்


விளையாட்டு வீராங்கனைகளுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் திட்டம்
x

திருவண்ணாமலையில் விளையாட்டு வீராங்கனைகளுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சார்பில் திருவண்ணாமலை விளையாட்டு விடுதி மாணவிகள் 80 வீராங்கனைகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் சுகாதார பெட்டகங்களை வழங்கும் திட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட ரெட் கிராஸ் தலைவர் இந்திராஜன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சுகாதார பெட்டகம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப் சிங், உதவி கலெக்டர் மந்தாகினி, முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், வெற்றி தமிழர் பேரவை தலைவர் கார்த்திக் வேல்மாறன், முன்னாள் நகர வங்கி தலைவர் பன்னீர்செல்வம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ரெட் கிராஸ் பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.


Next Story