விவசாயிக்கு அடி-உதை


விவசாயிக்கு அடி-உதை
x

மானூர் அருகே விவசாயிக்கு அடி-உதை விழுந்தது.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள அழகிய பாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் தாவீது மகன் ராசையா (வயது 35). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள உறவினர்களிடம் தங்களது குடும்ப சொத்து விஷயமாக ஆத்திரத்துடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியே வந்த வெளியூர் நபர்கள் 3 பேர், தங்களைத்தான் ராசையா அவதூறாக பேசுவதாக நினைத்து தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர், அங்கு கீழே கிடந்த கம்பை எடுத்து ராசையாவை சரமாரியாக தாக்கி உள்ளார். மற்ற இருவரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் வரவே, அந்த மூவரும் ராசையாவுக்கு கொலை மிரட்டல் விட்டபடி ஓடிவிட்டனர். தாக்குதலில் காயம் அடைந்த ராசையா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.Next Story