கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது


கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
x

கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை அடுத்த ஆறுக்காட்டுத்துறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடி செலவில் படகு நிறுத்த தூண்டில் முள் வளைவு கட்டுப்பணி நடந்துவருகிறது. இதற்காக புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கல் ஏற்றி வந்து ஆறுக்காட்டுத்துறை கடலில் கொட்டி தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வேதாரண்யம் கரியாப்பட்டினம் சாலையில் திருச்சியில் இருந்து கருங்கல் ஏற்றி வந்த லாரி எதிரே வந்த காருடன் மோதி, மணக்காடு என்ற இடத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தால் திருத்துறைப்பூண்டி கரியாப்பட்டினம் வேதாரண்யம் பகுதியில் போக்குவரத்து 5 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story