7 அடி நீள பாம்பை தன் தோளில் போட்டுக்கொண்டு மது வாங்க வந்த நபரால் பரபரப்பு


7 அடி நீள பாம்பை தன் தோளில் போட்டுக்கொண்டு மது வாங்க வந்த நபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 May 2023 8:59 AM IST (Updated: 18 May 2023 9:02 AM IST)
t-max-icont-min-icon

அவரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறி ஓடினர்.

செங்கல்பட்டு,

'மதுர' விஜய் பாணியில் பாம்பை தோளில் போட்டுக் கொண்டு பாஸ்மாக் வந்த மதுப்பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு, ஏழு அடி நீளம் கொண்ட பாம்பை தோளில் போட்டுக் கொண்டு, முதியவர் ஒருவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினார்.

அவரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறி ஓடினர். இதனிடையே பாம்பை லாவகமாக பிடித்து சிறிது நேரம் வேடிக்கை காட்டியபடி இருந்த அவர், அதை தனது லுங்கியில் போட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.



Next Story