ரூ.1½ கோடியில் அடமான கடன்


ரூ.1½ கோடியில் அடமான கடன்
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1½ கோடியில் அடமான கடன் விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வங்கியின் தலைவர் தங்கசேகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் வங்கி பொது மேலாளர்(பொறுப்பு) குமார், மேலாளர் ஜெயராமன், துணை மேலாளர் தியாகராஜன், இயக்குனர்கள் வக்கீல் செந்தில், தனுசு, கலைச்செல்வன், பாஸ்கரன், தயாளபதி, தாயம்மாள், ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நகை கடன் வட்டியை 9 சதவீதத்தில் இருந்து 8½ சதவீதமாக குறைப்பது, நீண்ட நாட்களாக கடன் பெற்று தவணை தவறிய கடன்களை வசூல் செய்ய சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது, அடுத்த மாதம் வங்கியில் ஏ.டி.எம். மையம் திறப்பது, பங்கு தொகையை பெறாதவர்கள் உடனே வங்கியை அணுகி பயன்பெறலாம், வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1½ கோடியில் அடமான கடன் வழங்குவது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story