அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் பல்துறை பணிவிளக்க கண்காட்சி


அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் பல்துறை பணிவிளக்க கண்காட்சி
x

அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியை அமைச்சர் காந்தி திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருவள்ளூர்

திருத்தணி சன்னதி தெருவில் உள்ள தணிகை இல்லம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட பல்துறை பணி விளக்க கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையிலான சிறப்பு புகைப்பட கண்காட்சி, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம், திருத்தணி நகராட்சி, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மகளிர் சுய உதவி குழு, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட 16 துறைகள் சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், வருவாய் ஆர்.டி.ஓ. தீபா, துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி, திருத்தணி நகர் மன்ற துணைத் தலைவர் சாமிராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு, அறங்காவலர் சுரேஷ்பாபு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story