மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் பயிற்சிப் போட்டியில் புதிய சாதனை


மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் பயிற்சிப் போட்டியில் புதிய சாதனை
x

மொத்தம் 707 செஸ் பலகைகள் நேரடியாக ஆன்லைனில் இணைக்கப்பட்டு பயிற்சிப் போட்டி நடைபெற்றது.

சென்னை,

மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், நடுவர்கள், செஸ் கூட்டமைப்பினர் என 3 ஆயிரம் பேர் சென்னைக்கு வருகை தருகின்றனர்.

இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு வெகு விமரிசையாக செய்து வருகிறது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்னதாக, மாமல்லபுரத்தில் இன்று பயிற்சி போட்டி நடைபெற்றது. இதில் 1,414 செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 707 செஸ் பலகைகள் நேரடியாக ஆன்லைனில் இணைக்கப்பட்டு பயிற்சிப் போட்டி நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இந்த பயிற்சி போட்டி, நோபில் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மூலம் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்பு ஒரே நேரத்தில் இணையதள வசதியுடன் 150 செஸ் போர்டுகள் கொண்டு நடத்தப்பட்ட போட்டியே சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாமல்லபுரத்தில் 707 போர்டுகளுடன் பயிற்சி போட்டி நடத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.


Next Story