2-வது இடம் பிடித்த குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு


2-வது இடம் பிடித்த குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு
x

சிறந்த நகராட்சிகளில் 2-வது இடம் பிடித்த குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி 1,886-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 136 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். குடியாத்தம் நகராட்சி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது.

தமிழக அளவில் சிறந்த நகராட்சியாக குடியாத்தம் நகராட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. சென்னை கோட்டையில் நடைபெறும் 75-வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பரிசுத் தொகையை வழங்குகிறார். நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் பரிசுகளை பெற உள்ளனர்.


Next Story