வேடம் அணிந்து சிறுவர்- சிறுமிகள் ஊர்வலம்


வேடம் அணிந்து சிறுவர்- சிறுமிகள் ஊர்வலம்
x

திசையன்விளையில் வேடம் அணிந்து சிறுவர்- சிறுமிகள் ஊர்வலமாக சென்றனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

ராமநவமியை முன்னிட்டு நேற்று மாலை திசையன்விளை அற்புதவிநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க ராமர், சீதை, அனுமன், கிருஷ்ணர் உள்பட பல்வேறு வேடம் அணிந்த சிறுவர், சிறுமியர் மற்றும் பால்குட ஊர்வலம் புறப்பட்டது. இந்து முன்னணி மாநில செயலாளர் அரசு ராஜா கொடியசைத்து தொடங்கிவைத்தார் ஊர்வலம் திசையன்விளை மெயின்பஜார் வழியாக வந்து அப்புவிளை மாளவியா வித்யாகேந்திர பள்ளியை அடைந்தது. அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. ஏற்பாடுகளை நகர இந்து முன்னணி தலைவர் ஜெயசீலன், செயலாலர் மணிகண்டன், பொருளாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்


Next Story